புலனாய்வாளர்கள் என கூறி கொள்ளை; வீடுகளுக்குள் எவரையும் அனுமதிக்க வேண்டாம்!

சிவில் உடையில் புலனாய்வாளர் என தெரிவித்து விசாரணை செய்ய முனையும் நபர்களை வீடுகளுக்குள் அனுமதிக்க வேண்டாம் என வவுனியா பொலிசார் அறிவித்துள்ளனர். வவுனியா மற்றும் வடக்கின் பல பகுதிகளில் தங்களை அரச புலனாய்வாளர் என கூறிக்கொண்டு, வீடுகளில் சோதனை என்ற... Read more »

வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்- இருவர் படுகாயம்

வவுனியா- மகாரம்பைக்குளத்திலுள்ள வீடொன்றிற்குள் வாள் மற்றும் கத்திகள் ஆகியவற்றுடன் உட்புகுந்த குழுவினர், அங்கிருந்தவர்கள் மீது கடுமையாக தாக்குதல் நடத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற இந்த சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்ததுடன், வீடும் பலத்த சேதத்துக்கு உள்ளாக்கப்பட்டுள்ளதாக எமது... Read more »

வவுனியாவில் கிறிஸ்தவ தேவாலயத்தில் முஸ்லீம் இளைஞன் கைது!

வவுனியா  உள்ள கிறிஸ்தவ தேவாலயமொன்றினுள் வைத்து முஸ்லீம் இளைஞனொருவன் நேற்று(புதன்கிழமை) இரவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கிறிஸ்தவர்களின் முக்கிய வழிபாட்டு வாரமாக தற்போது காணப்படும் நிலையில் நேற்றைய தினம் குறித்த ஆலயத்தில் இரவு வழிபாடு இடம்பெற்ற நிலையில் சந்தேகத்திற்கிடமான முறையில்... Read more »

யாழிலிருந்து வெளியேறுவோருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!

யாழ்ப்பாணத்தில்  கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகரித்துள்ளமையினால், யாழில் இருந்து வவுனியா நோக்கி பேருந்தில் செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர்.பரிசோதனை முன்னெடுக்கப்படுகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள் பணிமனை உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸார் ஆகியோர் இணைந்து, வவுனியா விதை... Read more »

தாமரை பூ பறிக்க சென்ற ஆசிரியர் சடலமாக மீட்பு!

வவுனியாவில் தாமரைப்பூ பறிக்கச்சென்ற ஆசிரியர் ஒருவர் வைரவபுளியங்குளம் குளப்பகுதியில் இருந்து சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறித்த ஆசிரியர் அந்தப் பகுதியில் உள்ள ஆலயத்தின் தேர் திருவிழாவுக்காக குளத்தில் தாமரைப்பூ பறிக்கச் சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவரை காணவில்லை என்பதால், அப்பகுதியில்... Read more »

ஓமந்தை சோதனை சாவடியை நிரந்தமாக்கும் இராணுவம் ?

வவுனியா- ஓமந்தையில் கொரோனா அச்சுறுத்தல் காலப்பகுதியில், தற்காலிகமாக அமைக்கப்பட்ட இராணுவ சோதனைச் சாவடியை நிரந்தரமாக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். இவ்விடயம் தொடர்பாக அப்பிரதேச மக்கள் மேலும் கூறியுள்ளதாவது, “நாட்டில் கடந்த வருடம், கொரோனா அச்சுறுத்தல் அதிகரித்து காணப்பட்டமையினால்,... Read more »

குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் கைது

வவுனியா – பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கடந்த காலத்தில் அவரின் உடல்... Read more »

பத்தாயிரம் பேருடன் இந்தியா போவதென்பது டக்ளஸின் ஏமாற்று வேலை

பத்தாயிரம் பேருடன் இந்தியா செல்லப்போகின்றேன் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமையானது ஏமாற்று வேலையென தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ். மாவட்ட இணைப்பாளர் முரளிதரன் தெரிவித்துள்ளார். வவுனியாவில் இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது, கடற்றொழில் அமைச்சர்... Read more »

வவுனியா கிராமங்களில் தகவல் சேகரிக்கும் இராணுவத்தினர்

வவுனியாவில் சில கிராமங்களில் இராணுவத்தினர் குடியிருப்பாளர்களின் விபரங்களைச் சேகரித்து வருவதனால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். வவுனியா புதிய சேலர் சின்னக்குளத்தில் கடந்த இரண்டு நாட்களாக வீடுவீடாகச் செல்லும் நான்கு இராணுவத்தினர், இவ்வாறு பதிவுகளை மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். இந்தப்... Read more »

வவுனியாவில் இராணுவத்தின் துப்பாக்கி சூடு – இருவர் காயம்!

வவுனியா – ஓமந்தை பகுதியில் இராணுவத்தின் துப்பாக்கிசூட்டிற்கு இலக்காகி இரண்டு பேர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் இன்று (புதன்கிழமை) காலை 4 மணிக்கு இடம்பெற்றுள்ளது. ஓமந்தை காட்டுப் பகுதியில் இருந்து சட்டவிரோதமாக மரங்களை கடத்திச் சென்ற வாகனத்தை வீதியில் கடமையில்... Read more »