வடக்கில் கோரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,000ஐத் தாண்டியது

வடக்கு மாகாணத்தில் 2020 மார்ச் மாதம் தொடக்கம் நேற்று வரை கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஆயிரத்து 4 பேராக அதிகரித்துள்ளது. மாந்தை மேற்கில் 6 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேர் உள்பட 42 பேர் வடமாகாணத்தில் கோரோனா... Read more »

நெடுந்தீவுக் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!

குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர்களைத் தேடி இரண்டு நாட்களாக தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்ட பணியில், நயினாதீவு முனைக் கடலிலேயே... Read more »

தடுப்பூசி பெற்றுக்கொண்ட யாழ்.போதனா வைத்தியசாலை மருத்துவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை நரம்பியல் மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை நேற்று  திங்கட்கிழமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இடம்பெற்ற பிசிஆர் பரிசோதனையிலேயே அவருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேவையாற்றி வரும் நரம்பியல் மருத்துவ... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை வைத்தியருக்கு கொரோனா – சிறப்புக்குழு கண்காணிப்பில்!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மருத்துவ வல்லுநர் ஒருவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அதனையடுத்து வைத்தியசாலையில் முன்னெடுக்கப்பட்ட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பதில் பணிப்பாளர், மருத்துவர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜா தெரிவித்தார். மருத்துவ... Read more »

பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த விருதுகள் இடைநிறுத்தம்!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் பொதுப் பட்டமளிப்பு விழாவில் வழங்கப்படும் பேராசிரியர் அ. துரைராஜா ஞாபகார்த்த தங்கப் பதக்கப் பரிசில்கள் இம்முறை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தரின் ஊடகப் பிரிவு இந்தத் தகவலைத்தெரிவித்துள்ளது. யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் அ.... Read more »

எல்லை மீறிய இந்திய மீனவர்களால் பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் நாசம்!

எல்லை தாண்டிய இந்திய மீனவர்களால் யாழ்ப்பாணம்- வடமராட்சிக் கிழக்கு வெற்றிலைக்கேணி மீனவர்கள் மூவரது, பல இலட்சம் பெறுமதியான மீன்பிடி வலைகள் வெட்டப்பட்டு நாசம் செய்யப்பட்டுள்ளது. குறித்த மீனவர்கள் மிகவும் வறிய நிலையில் வங்கிகளில் கடன்பட்டு, வலைகளை கொள்வனவு செய்து மீன்பிடியில்... Read more »

வடக்கில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா தொற்று!

வடக்கு மாகாணத்தில் மேலும் ஆறு பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 442 பேரின் மாதிரிகள் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதிலலேயே ஆறு... Read more »

தொண்டமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் உயிரிழப்பு

யாழ்ப்பாணம், தொண்டைமானாறு கடலில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் உயிரிழந்துள்ளார்.சுய நினைவற்ற நிலையில் ஊரணி பிரதேச வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில், அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தச் சம்பவம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை ஐந்து மணியளவில் இடம்பெற்றதுடன் சுமார் ஒன்றரை மணிநேரத்துக்குப் பின்பே கடலில்... Read more »

யாழ்.சிறை கைதிக்கு கொரோனா – தொடர்புகளை கண்டறிவதில் சிக்கல்!

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் விளக்கமறியல் கைதி ஒருவருக்கு கோரோனா தொற்று உள்ள நிலையில் அவருடன் ஒரே சிறைக்கூடத்தில் இருந்த ஏனைய 7 பேரையும் அதே கூடத்தில் சுயதனிமைப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களம் பணித்துள்ளது. மானிப்பாய், சங்குவேலியைச் சேர்ந்த குறித்த கைதி கடந்த 11ஆம் திகதி... Read more »

கடலுக்குள் வீழ்ந்த மோட்டார் சைக்கிள் – குடும்பஸ்தர் உயிரிழப்பு

பருத்தித்துறை திக்கம் சந்திக்கு அண்மையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் குடும்பஸ்தர் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நேற்று (வெள்ளிக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக ஆரம்ப விசாரணைகளின் பின்னர் பருத்தித்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த மோட்டார் சைக்கிள் விபத்துக்குள்ளாகி கடலுக்குள் வீழ்ந்தமையால் இந்த... Read more »