பொத்துவில்லில் நிலநடுக்கம்

அம்பாறை- பொத்துவில் கடற்கரையை அண்டிய பிரதேசத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை 11.44 மணியளவில் 4.0 ரிக்டர் அளவில், நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அம்பாறை மாட்ட அனர்த்த இடர் முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது. பொத்துவில்- சர்வோதயபுரம், சின்னஊறணி,  ஜலால்தீன்சதுக்கம், களப்புகட்டு பிரதேசங்களில் இந்த... Read more »

முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு கசையடி வழங்க வேண்டும்

தேர்தல் காலங்களில் இஸ்லாமிய நடைமுறைகளை கூறி வாக்குகளை பெற்றவர்கள் அதை மீறிவிட்டு தப்பமுடியாது. எனவே முஸ்லிம் காங்கிரஸ்  உறுப்பினர்கள் மக்களிடம்   இஸ்லாமிய தண்டனையான கசையடி வாங்கிக் கொள்ள வேண்டும் என திருகோணலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தெரிவித்தார்.... Read more »

சாணக்கியன், கருணாகரம் உள்ளிட்ட எழுவருக்கு அழைப்பாணை

நாடாளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன், கோ.கருணாகரம், த.கலையரசன் உள்ளிட்ட எழுவரை, எதிர்வரும் ஏப்ரல்  30 திகதி முன்னிலையாகுமாறு கல்முனை நீதவான் நீதிமன்றினால் அழைப்பாணை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையிலான பேரணியில் கலந்து கொள்வார்கள் என கூறி, கல்முனை பொலிஸ்... Read more »

மட்டக்களப்பில் பொலிஸாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை!

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 14 பொலிஸ் நிலையங்களில் கடமையாற்றும்  பொலிசாருக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றும் ஆரம்ப நடவடிக்கை நேற்று (செவ்வாய்க்கிழமை)   மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் பணிப்பாளர் வைத்தியளர் கிரிசுதன் தலைமையில் இடம்பெற்றது. பாதுகாப்பு படையினருக்கு தடுப்பூசி ஏற்றம் நடவடிக்கையில்... Read more »

அடக்குமுறையை கையாண்டாலும் பேரணி தொடரும் – சுமந்திரன்

தடுத்த நிறுத்த அடக்குமுறையை கையாண்டாலும் பொலிகண்டி வரை நிச்சயம் செல்வோம் என கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார். கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியது. இந்நிலையில் போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து... Read more »

கொட்டும் மழையிலும் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம்

பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான தொடர் போராட்டம் இன்று (புதன்கிழமை) ஆரம்பமாகியுள்ள நிலையில், கொட்டும் மழையிலும் போராட்டக்காரர்கள் தமது நடைபவணியை முன்னெடுத்தனர். இந்தப் போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன், கலையரசன், இரா.சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், மதத் தலைவர்கள், இளைஞர்கள்,... Read more »

புனானையில் பேருந்து தடம்புரண்டு விபத்து: 13 பேர் படுகாயம்

மட்டக்களப்பு பிராதன வீதி புனானையில் இடம்பெற்ற பேருந்து விபத்தில், 13பேர் படுகாயமடைந்த நிலையில் வாழைச்சேனை வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலநறுவையில் இருந்து கல்முனை நோக்கி போக்குவரத்து சேவையில் ஈடுபட்ட தனியார்  பேருந்து,  இன்று (வெள்ளிக்கிழமை) காலை 6.30 மணிக்கு... Read more »

காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளருக்கு நீதி கோரி போராட்டம்!

கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகித் எக்னலிகொடவுக்கு நீதிகோரி மட்டக்களப்பில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ஊடக அமைப்புக்கள் இணைந்து நடத்திய இந்த ஆர்ப்பாட்டமானது மட்டக்களப்பு காந்திபூங்கா முன்பு காலை 10.30 மணியளவில் ஆரம்பமானது. உழைக்கும் ஊடக தொழிற்சங்க சம்மேளனம், கிழக்கு மாகாண... Read more »

ஊஞ்சல் சீலையில் சிக்குண்டு எட்டுவயது சிறுவன் உயிரிழப்பு

மட்டக்களப்பு- கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர், ஊஞ்சல் சீலையில் சிக்குண்டு உயிரிழந்த சோக சம்பவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்றுள்ளது. மகிழடித்தீவு- கட்டுப்பத்தை என்னும் பகுதியிலுள்ள மனோகரன் கேதீசன் என்னும் எட்டு வயது சிறுவனே... Read more »

மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை – வதந்தியால் சம்மாந்துறையில் பதற்றம்

மாணவர்களுக்கு பி.சி.ஆர். பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரவிய வதந்தியை அடுத்து பெற்றோர் பாடசாலையை முற்றுகையிட்டு மாணவர்களை அழைத்துச் சென்ற சம்பவம் சம்மாந்துறையில் பதிவாகியுள்ளது. அம்பாறை – சம்மாந்துறை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகளில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை மாணவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ள... Read more »