இருவேறு இடங்களில் குளவிகளின் தாக்குதலுக்கு இலக்காகி 10 பெண் தொழிலாளர்களும் எட்டு ஆண் தொழிலாளர்களும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தோட்டத் தொழிற்துறையில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவிகள் கொட்டியதினால் 12 பேர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தலவாக்கலை கிரேட்வெஸ்டன்... Read more »
கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாரச்சி நேற்று (செவ்வாய்க்கிழமை) தனது சேவையின் நிமித்தம் அமைச்சிற்கு சமுகமளித்துள்ளார். இதன்போது சுகாதார அமைச்சர் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுக்கிடையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடினார். இதேவேளை... Read more »
வாகன இறக்குமதியை நிறுத்தி வைக்கும் முடிவு இந்த ஆண்டின் இறுதி வரை நடைமுறையில் இருக்கும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் நேற்று (செவ்வாய்க்கிழமை) உரையாற்றிய நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவார்ட் கப்ரால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரூபாய்க்கான பெறுமதியின்... Read more »
மேலும் 500,000 ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசிகளை இலங்கைக்கு வழங்க இந்தியா உறுதியளித்துள்ளதாக பதில் சுகாதார அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் வியாழக்கிழமை இரவு குறித்த தடுப்பூசிகள் இலங்கையை வந்தடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சட்டமா அதிபரின்... Read more »
நானுஓயா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் 13 பேர் கடும்காயங்களுக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். மொனராகலை... Read more »
இத்தாலியில் வசித்து வந்த இலங்கையர்கள் இருவர், கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலியில் மிலான் மற்றும் ரோம் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தவர்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக கூறப்படுகின்றது. அதாவது கொட்டாவ பகுதியைச் சேந்த 57 வயதுடையவர், கொரோனா தொற்றுக்குள்ளாகி... Read more »
க.பொ.த. சாதாரணதரப் பரீட்சையை மார்ச் முதலாம் திகதி நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கிய இரு சிறப்பு பரீட்சை நிலையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் புஜித தெரிவித்தார். இதற்கிடையில், பரீட்சை... Read more »
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக பிரித்தானியா கொண்டுவரும் பிரேரணையை வெற்றிகொள்வதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இது குறித்து பேரவையின் உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதாகவும் பிரித்தானிய உயர் ஸ்தானிகர் சாரா ஹுல்டன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரிடம் தெரிவித்துள்ளார்.... Read more »
குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கி படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயுள்ளனர் என்று நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்தனர். அவர்களை தேடும் முயற்சியில் ஈடுபட்டவேளை அவர்கள் பயணித்த படகு மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் கூறினர். குறிகாட்டுவானிலிருந்து நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 1.45... Read more »
டுபாயில் அமைந்துள்ள இலங்கை துணைத் தூதரகம் இன்று (திங்கட்கிழமை) முதல் 24 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. தூதரகத்தில் பல ஊழியர்கள் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமையினால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக டுபாய் துணைத் தூதரகம் விடுத்துள்ள அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.... Read more »