ரவிகரன் மற்றும் சிவாஜி உள்ளிட்ட நால்வர் மீதான வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

முன்னாள் வட.மாகாண சபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன் மற்றும் எம்.கே.சிவாஜிலிங்கம், இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி உறுப்பினர் அன்ரனி ஜெகநாதன் பீற்றர் இளஞ்செளியன், முல்லைத்தீவு கடற்றொழிலாளர் சம்மேளன நிர்வாக உறுப்பினர் அன்னலிங்கம் சண்முகலிங்கம் ஆகிய நால்வருக்கு எதிரான வழக்கு விசாரணைகள்,... Read more »

விசமிகளால் சேதமாக்கப்பட்டது கண்டலடி மாவீரர்துயிலும் இல்லம்

கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டுள்ளமைக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் கண்டனம் வெளியிட்டுள்ளார். கார்த்திகை தீபத்திருநாளான நேற்று (ஞாயிற்றுக்கிழமை), இனம் தெரியாத விசமிகளினால் வாகரை- கண்டலடி மாவீரர் துயிலும் இல்லம் சேதமாக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் குறித்த இடத்திற்கு... Read more »

கே.கே.எஸ். கடலில் குளித்த இரண்டாவது நபரின் சடலமும் மீட்பு

காங்கேசன்துறை கடலில் குளித்த இருவர் அலையில் அடித்துச் சென்ற நிலையில் இரண்டாவது நபரின் சடலமும் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர். காங்கேசன்துறை தல்செவன இராணுவ நட்சத்திர விடுதிக்கு அருகாமையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஒரு மணியளவில் கடலில் குளித்துக்கொண்டிருந்த இரண்டு... Read more »

காரைநகரில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு – பல குடும்பங்கள் சுயதனிமைப்படுத்தல்

காரைநகரில் 100 குடும்பங்கள் வரை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால் பிரதேசத்தின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. காரைநகர் இந்துக் கல்லூரி 3 நாள்களுக்கு மூடப்பட்டுள்ள நிலையில் யாழ்ரன் கல்லூரியில் 20 சதவீத மாணவர் வருகையே காணப்படுகிறது. கொழும்பிலிருந்து காரைநகருக்குத் திரும்பிய ஒருவருக்கு கோரோனா வைரஸ்... Read more »

யாழில் மூடப்பட்ட நிறுவனங்களை மீள திறக்க அனுமதி!

யாழ்ப்பாணம்- திருநெல்வேலியில் அமைந்துள்ள நொதேர்ன் வைத்தியசாலை, யாழ்.வைத்தியசாலை மற்றும் 8 வியாபார நிறுவனங்களையும் கட்டுப்பாட்டுடன் இன்று (திங்கட்கிழமை) தொடக்கம் மீளத் திறக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. என யாழ்ப்பாணம் மாநகர சுகாதார மருத்துவ அதிகாரி மற்றும் மருத்துவர் பாலமுரளி தெரிவித்துள்ளார். இவ்விடயம் தொடர்பாக... Read more »

புறக்கோட்டையில் மொத்த விற்பனை நடவடிக்கைகளுக்கு முற்றாக முடக்கம்

கொழும்பு- புறக்கோட்டை வழமைக்கு திரும்பினாலும் மொத்த விற்பனை நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது என பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு... Read more »

வழமைக்கு திரும்பின அரச பேருந்து சேவைகள்!

அரச பேருந்து சேவைகள் இன்று (திங்கட்கிழமை) முதல் வழமைப் போல இடம்பெறும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்ஸிலி ரணவக்க தெரிவித்துள்ளார். தூரப்பிரதேசங்களுக்கான பேருந்து சேவை கடந்த காலங்களில் பாரிய அளவில் குறைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சேவைகள் இன்று... Read more »

மஹர சிறைச்சாலை மோதல் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரிப்பு

நீர்கொழும்பு மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 8ஆக அதிகரித்துள்ளது. அத்துடன், காயமடைந்த 58 பேர் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருவதாக ராகமை வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை... Read more »

பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன

கொழும்பு மாவட்டத்தில் மூன்று பொலிஸ் அதிகார பிரதேசங்களும் கம்பஹா மாவட்டத்தில் இரண்டு பொலிஸ் அதிகார பிரதேசங்களும் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதற்கமைய இன்று (திங்கட்கிழமை) அதிகாலை 5 மணியுடன் குறித்த பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன என கொவிட்-19 பரவலைத்... Read more »

கொரோனோ மரணம் 116 ஆக உயர்வு – நேற்றும் 496 பேருக்கு தொற்று!

நாட்டில் நேற்று  மட்டும் 496 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட... Read more »