குறைந்த கட்டணத்தில் மற்றுமொரு விமான சேவை!

உக்ரைனை தளமாக கொண்ட SkyUp LLC நிறுவனத்திற்கு சொந்தமான SkyUp Airlines விமான சேவை குறைந்த கட்டணத்தில் விமான சேவையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ளது.

உக்ரைன் நாட்டு தலைநகரான Kyivவில் இருந்து கொழும்பு மற்றும் ஆஸ்திரியா ஆகிய இடங்களுக்கு குறைந்த கட்டனத்தில் விமான சேவையினை முன்னெடுப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்பம், தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

குறிப்பாக, எதிர்வரும் ஒக்டோபர் முதலாம் வாரத்தில் Kyivவில் இருந்து கொழும்புக்கு சேவையினை ஆரம்பிப்பதற்கு அனுமதி கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், Kyiv-Salzburgக்குமான விமானங்களையும் அதே விதிமுறைகளில் தொடங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது, உக்ரைனில் இருந்து கொழும்பு மற்றும் Salzburgக்கு நேரடி விமான சேவைகள் இல்லை.

முன்னதாக, Kyiv மற்றும் கொழும்புக்கு இடையில், உக்ரைனின் மிகப்பெரிய விமான நிறுவனமான உக்ரைன் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (யுஐஏ) ஆல் இயக்கப்பட்டது, எனினும், திறமையின்மை காரணமாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது!


Recommended For You

About the Author: Editor