விஷாலின் திருமணம் குழம்பியது.

விஷாலின் திருமணம் எதிர்வரும் அக்டோபர் மாதம் நடைபெற இருக்கும் நிலையில், திருமணம் நிறுத்தப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

விஷாலுக்கும், ஆந்திரா தொழிலதிபர் மகளும், நடிகையுமான அனிஷாவுக்கும் கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் கூறப்பட்டது.

இதனையடுத்து இரண்டு குடும்பத்தினரும் தீவிரமாக திருமண ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் அனிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விஷாலுடன் இருந்த அனைத்து ஒளிப்படங்களையும் நீக்கியுள்ளார்.

இதனால், விஷால், அனிஷா திருமணம் நிறுத்தப்பட்டு இருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து விஷால் மற்றும் அனிஷா தரப்பினரிடையே எந்த தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்