50 விக்கெட்டுக்களை வீழ்த்திய பும்புர

இந்தியக் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரிட் பும்ரா, டெஸ்ட் போட்டிகளில் அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்திய மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

என்டிகுவா மைதானத்தில் நடைபெற்றுவரும் மேற்கிந்திய தீவுகள் அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியின் போதே, அவர் இந்த முத்திரையை பதித்துள்ளார்.

இவ்வாறு அதிவேகமாக 50 விக்கெட்டுகளை வீழ்த்தியதன் மூலம், முன்னாள் வீரர்களான வெங்கடேஷ் பிரசாத் மற்றும் முகமது ஷமி ஆகியோரின் சாதனையை முறியடித்துள்ளார்.

இவர்கள் இருவரும் 13 டெஸ்ட்களில் இச்சாதனையை படைத்திருந்தனர். ஆனால், பும்ரா 11 டெஸ்ட்டுகளில் இந்த மைல்கல்லை எட்டினார்.
மேலும், அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் நரேந்திர ஹிர்வானி மற்றும் ஹர்பஜன் சிங் ஆகியோருடன் 3ஆம் இடத்தை பகிர்ந்துகொண்டார்.

அதிவேகமாக 50 விக்கெட்டுகள் வீழ்த்திய இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் 9 டெஸ்ட்களுடன் அஸ்வின் முதலிடத்திலும், 10 டெஸ்ட் போட்டிகளுடன் அனில் கும்ப்ளே 2-ஆம் இடத்திலும் உள்ளனர்.

எனினும், பந்துகளின் எண்ணிக்கை அடிப்படையில் இதில் அஸ்வின் சாதனையை பும்ரா முறியடித்துள்ளார். 50 விக்கெட்டுகளை வீழ்த்த அஸ்வினுக்கு 2,597 பந்துகள் தேவைப்பட்ட நிலையில், பும்ராவுக்கு 2,465 பந்துகள் மட்டுமே தேவைப்பட்டது.


Recommended For You

About the Author: ஈழவன்