பங்களாதேஷில் பேருந்து விபத்து – 8 பேர் பலி.

பங்களாதேஷில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் எட்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

ஃபரிட்பூர் மாவட்டத்தின் உபஜிலா என்ற பகுதியிலுள்ள பாலம் ஒன்றிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் 25 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து இடம்பெற்ற பகுதியில் முன்னெடுக்கப்பட்டிருந்த மீட்பு நடவடிக்கைகள் காரணமாக, குறித்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றது.

விபத்து குறித்து வழக்கு பதிவு செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: ஈழவன்