மைத்திரி – கோட்டா, இரகசிய சந்திப்பு.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சந்திப்பு சில தினங்களுக்கு முன்னர் கொழும்பில் இரகசியமாக நடைபெற்றதாக கூறப்படுகிறது.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து இருவரும் மனம்விட்டுப் பேசியதாகவும் இதன்போது பல முக்கியமான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும் அந்தத் தீர்மானங்களை தற்போது பகிரங்கப்படுத்தாதிருக்க இருவரும் உடன்பட்டுள்ளனரென்றும் கூறப்படுகிறது.

குறிப்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்கும் இடையில் அரசியல் கூட்டணி அமைக்க நடந்துவரும் பேச்சுக் குழுவின் உறுப்பினர்களை மாற்றியமைக்க இதன்போது இணக்கம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டால் மைத்திரிக்கு உரிய அந்தஸ்தை வழங்க கோட்டாபய ராஜபக்ஷ இதன்போது உத்தரவாதம் அளித்தார் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன


Recommended For You

About the Author: ஈழவன்