கொலையாளிகளுக்கு அமைச்சு பதவி.

இளைஞர்களைக் கொன்றவர்களுக்கு தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு தாமரைத் தடாக அரங்கில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த மேலும் கூறியுள்ளதாவது, “1989 ஆம் ஆண்டுகளில் எம்பிலிப்பிட்டியவிலிருந்து பட்டலந்தை வரை பல இடங்களில் சித்திரவதை முகாம் இருந்ததை கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்தக் கால கட்டத்தில்தான் மனித உரிமைகள் என்ற வார்த்தையை முதன் முதலில் அறிமுகம் செய்தோம்.

இளைஞர்கள் ஞாபகம் வைத்துக்கொள்ள வேண்டும் எமது காலத்தில் இளைஞர்கள் கொல்லப்பட்டமைக்கு நீதியை பெற்றுக்கொடுத்தோம்.

ஆனால் தற்போது இந்த அரசாங்கம் முன்னெடுக்கும் செயற்பாட்டினால் பாரிய பிரச்சினைக்கு முகம்கொடுக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் இளைஞர்களை தேடித் தேடி கொலை செய்தவர்களுக்கும் சித்திரவதை செய்தவர்களுக்கும் அன்று முறையான தண்டனை வழங்கியிருந்தால் இந்த அரசாங்கத்தைக் கொண்டு நடாத்த தலைவரும் அமைச்சர்களும் இருந்திருக்க மாட்டார்கள்.

அத்துடன் அன்று சித்திரவதை பட்டவர்களும் அதற்கு எதிராக குரல் கொடுத்தவர்களும் இன்று ஓரணியில் திரண்டுள்ளனர்.

மேலும் கடந்த காலங்களில் இளைஞர்களை மீட்ட நாம் இன்று அவதிப்பட்டு வருகின்றோம்” என தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: ஈழவன்