
நாட்டில் கடந்த சில நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக நீர்மின் உற்பத்தி அதிகரித்துள்ளதாக மின்சக்தி அமைச்சின் ஊடக பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்த்தன தெரிவித்துள்ளார்.
கடந்த நாட்களில் பெய்த மழை காரணமாக, நீர்மின் உற்பத்தி நிலையங்களுக்கு கிடைத்த நீரின் அளவு அதிகரித்துள்ளது.
இதற்கமைய காசல்றீ, மவுஸ்ஸாகலை, விக்டோரியா, ரந்தெனிகலை, கொத்மலை உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் நூற்றுக்கு 45 சதவீதமளவில் உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் நிலவிய வறட்சியான வானிலையின்போது 12 சதவீதம் முதல் 15 சதவீதம் நீர்மின் உற்பத்தி வீழ்ச்சியடைந்திருந்ததென்றும் தற்போது, நீர்மின் உற்பத்தி 25 சதவீதம் முதல் 30 சதவீதமாக உயர்ந்துள்ளதாக சுலக்ஷன ஜயவர்த்தன குறிப்பிட்டுள்ளார்.