உறவுகளோடு வந்த வாகனம் அனுராதபுரத்தில் விபத்து!!

அனுராதபுரம் பகுதியில் இன்று அதிகாலை விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹயஸ் ரக வாகனமொன்று மரத்தில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

பிரான்ஸ்சிலிருந்து வந்த நால்வருடன், அவர்களை அழைத்து வர சென்ற வவுனியாவை சேர்ந்த மூவரும் குறித்த வாகனத்தில் பயணித்துள்ளனர்.

அதோடு சாரதியின் கட்டுப்பாட்டை மீறி இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும் அறியமுடிகின்றது.

இதேவேளை அதிஸ்ரவசமாக குறித்த வாகனத்தில் பயணித்தவர்களிற்கு சிறு காயங்கள் மட்டுமே ஏற்பட்டிருந்ததாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor