கண்காணிப்பு ரேடார்களை சேதமாக்கும் போராளிகள்!

மஞ்சள் மேலங்கி போராட்டம் ஆரம்பித்த நாளில் இருந்து இதுவரை சேதமாக்கபட்ட வீதி கண்காணிப்பு ரேடார்களின் சேத விபரங்கள் வெளியாகியுள்ளன.
மஞ்சள் மேலங்கி போராட்டம் இன்று 41 ஆவது வாரத்தினை எட்டியுள்ளது. போராளிகள் வீதிகளை முடக்கியும், கண்காணிப்பு ரேடார் கருவிகளை உடைத்து, சேதமாக்கி எரியூட்டியும் உள்ளனர். நேற்று ஓகஸ்ட் 23 ஆம் திகதி, வீதி கண்காணிப்பாளர்களான <<Sécurité routière>> இது தொடர்பான சில தகவல்களை வெளியிட்டுள்ளது. அதில் இதுவரை €360 மில்லியன் யூரோக்கள் மஞ்சள் மேலங்கி போராளிகளால் சேதம் விளைவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
1,000 வரையான ரேடார் கருவிகள் சேதமாக்கப்பட்டுள்ளன. சேதமாக்கப்பட்ட ரேடார் கருவிகளை கடந்த வருட இறுதியில் நவீன வசதிகள் கொண்ட கருவிகளாக மாற்றியிருந்தனர். நான்கு மீற்றர்கள் உயரம் கொண்ட இந்த நவீன ரேடார்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

Recommended For You

About the Author: Editor