
தனுஷ் நடிப்பில் கவுதம் மேனன் இயக்கிய ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி செப்டம்பர் 6 என சற்றுமுன் படக்குழுவினர் அறிவித்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
கவுதம் மேனனின் வழக்கமான ஒரு அழகான காதலில் தொடங்கும் இந்த படத்தின் கதை பின்னர் திடீர் திருப்பமாக காதலுக்கு இடையூறு வர, அந்த இடையூறுகளை தகர்க்க பொங்கி எழும் நாயகனின் கதை தான் இந்த ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் கதை என டிரைலரில் இருந்து தெரிகிறது.
தனுஷ் ரொமான்ஸ், ஆக்சன் என இரண்டு வித நடிப்பில் அசத்தியுள்ளார். குறிப்பாக ஆக்சன் காட்சிகளில் பொறி பறக்கின்றது. மேகா ஆகாஷ் தமிழில் அறிமுகமான முதல் படம் இதுதான். ஆனால் இந்த படம் ரிலீஸாக தாமதமானதால் அவர் நடித்த ‘பேட்ட’, ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ பூமராங்’ ஆகிய திரைப்படங்கள் ஏற்கனவே ரிலீஸ் ஆகிவிட்டது. சசிகுமார் இந்த படத்தில் தனுஷ் அண்ணனாக நடித்துள்ளார்.
தர்புகா சிவாவின் இசையில் மெலடி ரொமான்ஸ் பாடல்கள் மற்றும் அதிரடி பின்னணி இசை படத்திற்கு பலம். மொத்தத்தில் ரொமான்ஸ் மற்றும் ஆக்சன் கலந்த ஒரு கவுதம் மேனனின் படைப்பு.