கவின் – லாஸ்லியா கமல் போட்ட குறும்படம்

பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க அவ்வப்போது கமல்ஹாசன் குறும்படம் போடுவது உண்டு. அந்த குறும்படத்தில் சிக்கியவர்கள் பாடு திண்டாட்டமாகவே பெரும்பாலும் இருந்து வருகிறது.

இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் லக்சரி பட்ஜெட் குறைந்ததற்கு காரணம் இதுதான் என்று கூறி கமல் ஒரு விளக்கப்படம் என்ற பெயரில் ஒரு குறும்படம் போடுகிறார் அதில் நள்ளிரவில் விதிகளை மீறி கவின், லாஸ்லியா பேசிக்கொண்டிருப்பது தெரிகிறது. மேலும் மைக்கை ஆஃப் செய்வதும் போன்றும் உள்ளது.

இந்த குறும்படத்தை பார்த்து கவின், லாஸ்லியா அதிர்ச்சி அடைகின்றனர். இன்றைய நிகழ்ச்சியில் இதுகுறித்து கவின், லாஸ்லியாவிடம் கமல் விளக்கம் கேட்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சியை விறுவிறுப்பாக்க கஸ்தூரி, வனிதா ஆகிய இரண்டு பேர்களை பிக்பாஸ் களமிறக்கியும் நிகழ்ச்சி சுவாரஸ்யம் ஆகாததால் தற்போது கமல்ஹாசனே களத்தில் இறங்கியுள்ளார். இந்த குறும்படம் அடுத்த வாரம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Recommended For You

About the Author: Editor