தமிழர்கழுக்கு கோத்தபாய ராஜபக்ச வழங்கிய உறுதி மொழி!

வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வை காண்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ச உறுதி வழங்கியுள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் இளைஞர் முன்னணியின் தேசிய மாநாடு கொழும்பில் உள்ள தாமரை தடாக அரங்கில் இன்று இடம்பெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், “வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள மக்கள் எதிர்நோக்கும் மிக பிராதான பிரச்சினைகளில் வேளைவாய்ப்பு முக்கிய இடத்தினை பெறுகின்றது. அந்த பிரச்சினை தமது ஆட்சி காலத்தில் தீர்க்கப்படும்.

தன்னுடைய கீழ் உள்ள அரசு, வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இளைஞர்களுக்கும் மற்றவர்களுக்கும் நல்ல வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும்.

எவ்வாறாயினும், வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள சில அரசியல் வாதிகள் தமிழ் மக்களை தவறாக வழிநடத்துவதாக தெரிவித்த அவர், அவ்வாறு செய்யவேண்டாம்” எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்


Recommended For You

About the Author: Editor