ஹொங்கொங்கில் பொலிசாருக்கும் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் இடையில் மோதல்.

ஹொங்கொங் போராட்டம் 12ஆவது வாரமாக இடம்பெற்று வருகின்ற நிலையில், இன்று (சனிக்கிழமை) அந்நகரின் குவாங் டோங் பகுதியில் திரண்ட ஆயிரக் கணக்கானோர் தங்கள் முகங்களை முகமூடிகளால் மறைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது போராட்டக்காரர்களுக்கும், பொலிஸாருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.

இதையடுத்து பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களை கலைக்க முற்பட்டனர். எனினும் பதிலுக்கு போராட்டக்காரர்களும் தங்கள் கைகளில் கிடைத்த ஆயுதங்களால் பொலிஸாரைத் தாக்கியுள்ளனர்.

ஹொங்கொங்கில் குற்ற வழக்குகளில் கைதுசெய்யப்படுவபர்களை சீனாவுக்கு நாடு கடத்தி, வழக்கு விசாரணையை மேற்கொள்வதற்காக கைதிகள் பரிமாற்ற சட்டத்தில் திருத்தம் கொண்டுவர அரசாங்கம் முடிவுசெய்தது.

இதை எதிர்த்து மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டதால் ஹொங்கொங் நிர்வாகத் தலைவர் கேரி லேம் திருத்தச் சட்ட வரைபை நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

ஆனால் திருத்தச் சட்டத்தை முழுமையாக இரத்துச்செய்ய வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கக்கூடாது எனவும் வலியுறுத்தி இரண்டு மாதங்களுக்கு மேலாக மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 


Recommended For You

About the Author: ஈழவன்