பெண்ணை பாஜக எம்எல்ஏ எட்டி உதைத்து ஏன்?

குஜராத்தில் நரோடா பகுதி பெண் ஒருவர், அத்தொகுதியின் பாஜக எம்எல்ஏவிடம் பொதுப்பிரச்சனை குறித்து தீர்வு கேட்க சென்றுள்ளார். அவரை பாஜக எம்எல்ஏ எட்டி உதைத்து தாக்கியுள்ளார்.

குஜராத் மாநிலம் நரோடா பகுதியைச் சேர்ந்தவர் நீது தேஜ்வாணி. இவர் அத்தொகுதியில் உள்ள ஒரு பொதுப்பிரச்சனைக்காக தீர்வு கேட்க பாஜக எம்எல்ஏ பல்ராம் தவானியின் அலுவலகத்திற்குச் சென்றுள்ளார்.

அப்போது அவர் கூறவருவதைக்கூட கேட்காமல் சாலையிலேயே சரமாரியாக அப்பெண்ணை பல்ராம் தாக்கியுள்ளார். இது குறித்து நீது கூறுகையில்,’என் பகுதியில் நடந்த ஒரு பொதுப்பிரச்சனை பற்றி கூற பாஜக எம்எல்ஏவை சந்திக்க சென்றேன். அப்போது நான் என்ன கூற வந்தேன் என்பதை கூட கேட்காமல் அறைந்தார். பின்னர் கீழே விழுந்தேன்.

என்னை காலால் உதைத்து தள்ளினார். அங்கிருந்த பாஜக தொண்டர்கள் எனது கணவரையும் தாக்கினர். நான் மோடியினை ஒன்று கேட்க விரும்புகிறேன். உங்கள் ஆட்சியின் கீழ் பெண்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க முடியும்?’ என கூறினார்.

நீது தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இச்சம்பவம் குறித்து பல்ராம் தவானி கூறுகையில், ‘ஏதோ உணர்ச்சிவசப்பட்டு இவ்வாறு செய்துவிட்டேன்.

என் தவறை நான் ஒப்புக் கொள்கிறேன். எவ்வித முன்விரோதத்துடனும் இதனை செய்யவில்லை. 22 ஆண்டுகளாக அரசியலில் இருக்கிறேன். இதுவரை இப்படி நடந்ததில்லை. அப்பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்’ என குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Editor