பயங்கரவாதிகளுடன் தொடர்பு – கேரளாவில் பெண் உட்பட இருவர் கைது.

பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் கேரளாவில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதான இருவரில் ஒருவர் பெண் என்பதுடன் இவர்களுக்கு லஷ்கர் இ தொய்பா இயக்கத்துடன் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர விசாரணை இடம்பெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பதாக மத்திய உளவுத்துறை அண்மையில் எச்சரிக்கை விடுத்தது. குறித்த பயங்கரவாதிகள் கோவையில் பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, தமிழ்நாடு முழுவதும் பலத்த பொலிஸ் பாதுகாப்பும் தீவிர சோதனை நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையிலேயே கேரளாவில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் இருவர் கைதாகியுள்ளனர்.


Recommended For You

About the Author: ஈழவன்