6 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவர் கைது

மட்டக்களப்பு காத்தான்குடியில் ஆறு வயதுச் சிறுமியை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டவரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

இன்று காலை கிரான்குளம் கடற்கரைப் பகுதிக்கு சிறுமியை அழைத்துச் சென்று துஷ்பிரயோகம் முற்பட்ட வேளை, அப்பகுதியில் நின்றவர்களினால் குறித்த சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பேரப்பிள்ளை உறவு முறையான குறித்த சிறுமியே சந்தேகநபர் கடற்கரைக்கு அழைத்துச்சென்று இவ்வாறு துஷ்பிரயோகம் செய்ய முற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

குறித்த சிறுமி மயக்கமுற்ற நிலையில் மீட்கப்பட்டு ஆரையம்பதி வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இதேவேளை, துஷ்பிரயோகம் செய்ததாக சந்தேகிக்கப்படுபவர் பொதுமக்களினால் பிடிக்கப்பட்டு காத்தான்குடி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Recommended For You

About the Author: Editor