கலக்கப்பட்ட தேயிலை உற்பத்தில் ஈடுபட்ட மூவர் கைது

சட்டவிரோதமாக இரசாயண பொருட்கள் கலக்கப்பட்ட தேயிலை உற்பத்தில் ஈடுபட்ட மூன்று பேர் தெரனியகலை – சப்புமல்கந்த பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இலங்கை தேயிலைச் சபை அதிகாரிகளும், வலானை ஊழல் ஒழிப்பு பிரிவினரும் இணைந்து, குறித்த தேயிலை உற்பத்தி தொழிற்சாலையை சோதனைக்கு உட்படுத்தியபோது, சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது, தேயிலையில் கலப்படம் செய்வதற்காக தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்த 25 கிலோகிராம் வெள்ளை நிறத் தூள் அடங்கிய 42 பொதிகள் மீட்கப்பட்டுள்ளன.

அத்துடன், அடையாளம் காணப்படாத 130 லீற்றர் திரவம் அடங்கிய கொள்கலன் ஒன்றும் கைப்பற்றப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.


Recommended For You

About the Author: Ananya