சர்ச்சைக்குரிய ஜனாதிபதி வேட்பாளர் திடீர் கைது

துனிசியாவின் சர்ச்சைக்குரிய ஜனாதிபதி வேட்பாளர் நபில் கரோயி கைது செய்யப்பட்டுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

துனியாவில் எதிர்வரும் செப்டம் மாதம் 15 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சவால்மிக்க வேட்பாளரான நபில் கரோயி நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நபில் கரோயி மீது சொத்துகுவிப்பு குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை உரிமம் இன்றி சட்டவிரோதமான முறையில் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்களை முன்னெடுத்த மூன்று தொலைக்காட்சி நிறுவனங்கள் நேற்றைய தினம் தடைசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya