பகிடிவதைவழக்கு -நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு!

பகிடிவதைக்கு உள்ளான மாணவியொருவருக்கு 6 இலட்சம் ரூபா இழப்பீடு வழங்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்த உத்தரவை காலி மேல்நீதிமன்றம் வழங்கியதோடு குறித்த இழப்பீட்டுடன் வழக்கும் சமரசம் செய்யப்பட்டுள்ளது.

லவுதுவ உயர்தொழில்நுட்பபீடத்தின் மாணவியொருவரை மோசமாக பகிடிவதைக்குள்ளாக்கியயதாக மாணவன் ஒருவர் , மூன்று மாணவிகள் மீது குற்றம்சுமத்தப்பட்டிருந்தது.

அவர்கள் தமது குற்றத்தை ஏற்றுக்கொண்டு, இழப்பீடு வழங்கி, வழக்கை சமரசமாக முடிக்க விரும்பிய நிலையில், அவர்களின் இந்த முடிவை பாதிக்கபட்ட மாணவியும் ஏற்றுக்கொண்டதையடுத்து, நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்த பகிடிவதை சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில் மாணவர்களின் மோசமான பகிடிவதையால் குறித்த மாணவி, உயர்தொழில்நுட்ப பீடத்தின் கல்வி நடவடிக்கையை பாதியிலேயே முடித்துக் கொண்டுள்ளார்.

எனினும், பகிடிவதையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காலி மேல்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் சம்பந்தப்பட்ட மாணவன் முதலாவது சந்தேகநபராகவும், மாணவிகள் 2,3,4வது சந்தேகநபர்களாகவும் பெயரிடப்பட்டனர்.

இதனையடுத்து மாணவர்களின் குற்றம் நிரூபிக்கப்பட்ட நிலையில், அவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டனர்.

1,2வது எதிரிகள் இணைந்து ஆறு இலட்சம் ரூபா அபராதம் செலுத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் , 3,4வது எதிரிகளான மாணவிகளின் குடும்பசூழலை கருத்திற் கொண்டு, பாதிக்கப்பட்ட மாணவி சமரசத்திற்கு உடன்பட்டதையடுத்து, குறித்த மாணவர்களை கடுமையாக எச்சரித்ததோடு, எதிர்காலத்தில் அவர்கள் பகிடிவதையில் ஈடுபட்டால், கடுமையான தண்டனை வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்


Recommended For You

About the Author: Editor