சதீஸ்கரில் 5 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை.

சதீஸ்கர் மாநிலத்தில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கி சூட்டில் 5 மாவோயிஸ்டுகள் உயிரிழந்துள்ளனர்.

சதீஸ்கர் மாநிலத்தின் துர்பேடா கிராமத்தின் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மறைந்திருப்பதாக பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு சென்ற பொலிஸார் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த முகாம்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இந்த தாக்குதலில் 5 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதுடன், குறித்த முகாமில் இருந்து ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்