தமிழகத்தினுள் பயங்கரவாதிகள் ஊடுருவல்.

தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை தாக்க பயங்கரவாதிகள் குறிவைத்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய உளவுத்துறை அதிகாரிகள் பயங்கரவாதிகளின் தாக்குதல் குறித்து பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இதன்படி நாகை அருகே உள்ள வேளாங்கண்ணி ஆலயம், நீலகிரி மாவட்டத்தில் உள்ள இராணுவ சேவை பயிற்சி கல்லூரி, சூலூரில் உள்ள விமானப்படை தளம், கேரளாவில் உள்ள சபரிமலை அய்யப்பன் ஆலயம், விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் ஆகியவை பட்டியிலில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

இதில் இராணுவ பயிற்சி மையமும், சூலூர் விமானப் படை தளமும் உயரிய பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் வேளாங்கண்ணி தேவாலயத் திருவிழாவிலும், விநாயகர் சதுர்த்தி விழாவிலும் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தகூடும் என பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 6 தீவிரவாதிகள் ஊடுருவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: ஈழவன்