அமேசன் தீயை அணைக்க விரைகிறது பிரேசில் இராணுவம்.

உலக நாடுகளில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அமேசன் காட்டுத் தீ விவகாரம் உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் உலகநாடுகளின் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் தீயை அணைக்கும் முயற்சிக்கு உதவ ஆயுதப் படைகளை அனுப்ப பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ உத்தரவிட்டுள்ளார்.

அமேசன் தீ கட்டுப்படுத்தப்படும் வரை பிரேசில் உடனான வர்த்தக ஒப்பந்தத்தை அமுலாக்கப் போவதில்லை என்றும் பிரான்ஸ் மற்றும் அயர்லாந்து நாடுகள் தெரிவித்துள்ளன. அதேநேரம் காட்டுத் தீயை அணைக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் பிரேசிலின் பல்வேறு நகரங்களிலும் நேற்று போராட்டங்களையும் நடத்தியிருந்தனர்.

2019ஆம் ஆண்டில் மட்டும் 73 ஆயிரம் தீ சம்பவங்கள் அமேசன் மழைக்காடுகளில் நடந்துள்ளதாக நாசா குறிப்பிட்டுள்ளது. இதுதொடர்பில் நாசா ஏற்கனவே பிரேசிலுக்கு எச்சரிக்கை பிறப்பித்திருந்தது. எனினும் இதனை கண்டுகொள்ளதா பிரேசில் தொடர்ந்தும் அலச்சியப்படுத்தி வந்தது.

தற்போது இந்த விடயம் சமூக வலைத்தளங்கள் உட்பட உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதன் காரணமாக பிரேசிலுக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.

காலநிலை மாற்றங்கள் தொடர்பில் நம்பிக்கையில்லாத அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தற்போது இவ்விடயம் தொடர்பாக அமெரிக்கா உதவத்தயாராக இருப்பதாக ருவிட்டர் செய்துள்ளார்.

கடந்த இரு வாரங்ககளுக்குமேலாக அமேசன் காடுகளில் தீ எரிந்து வருகின்றது. இந்த காட்டுத் தீயால் பிரேசிலின் ரொரைமா, ஆக்ரி, ரோந்தோனியா மற்றும் அமேசனாஸ் ஆகிய பகுதிகள் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன.

20 மில்லியனுக்கும் அதிகமான பிரேசிலியர்கள் இந்த பிராந்தியத்தில் வாழ்கிறார்கள். 2018 தரவுகளோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு மட்டும் அமேசன் மழைக்காடுகள் பற்றி எரியும் சம்பவம் 85 சதவீதம் அதிகரித்துள்ளது.

இந்தக் காட்டுத் தீ மற்றும் காட்டு அழிப்பு ஆகியவற்றால் முதலில் பாதிக்கப்படுவது அமேசனில் வாழும் பழங்குடிகள்தான். ஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசன் வனப்பகுதியில் வாழ்கிறார்கள். அமேசனுக்கு ஏற்படும் இந்த பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்துகிறது.

உலகின் மிகப்பெரிய மழைக்காடுகளான அமேசன் காடுகள், தென் அமெரிக்க கண்டத்தில் 5.5 மில்லியன் ஹெக்டேர் அளவில் பரவியுள்ளது. தொடர்ந்து தீ எரிவதால் அரிய வகை தாவரங்கள் மற்றும் விலங்குகளுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

உலகின் நுரையீரல் எனப்படும் அமேசன் காடுகள் ஒட்டுமொத்தமாக 20 சதவீத ஒக்சிஜன் தேவையை பூர்த்தி செய்கிறது. காடுகள் அழிவதால் அது சேமித்து வைத்திருக்கும் கரியமில வாயு அதிகளவு சூழலில் கலந்து மனிதர்களுக்கு உடல் ரீதியான பாதிப்பினை ஏற்படுத்தும்.

1950ஆம் ஆண்டு முதல் அமேசன் மழைக்காடுகள் தனது 18 சதவீத பரப்பளவை இழந்துள்ளது.

அமேசன் மழைக்காடுகள், கோடைக்காலத்தில்கூட அவ்வளவு எளிதில் தீ பற்றக்கூடியதல்ல. வறண்ட காடுகளைப் போன்று இவை காணப்படுவதில்லை. அதிகபட்சம் அடர்த்தியான ஈரப்பதம் மிக்க காடுகளைக் கொண்டது.

அமேசன் மழைக்காடுகள் ஒன்பது நாடுகளில் பரவியுள்ளது. அந்நாடுகள் பிரேசில், கொலம்பியா, பெரு, வெனிசுலா, ஈக்வெடார், கயானா, பொலிவியா, சுரிநாம், பிரெஞ்சு கயானா ஆகியனவாகும். இவற்றில் நான்கு நாடுகளில் உள்ள அமேசனாஸ் என்ற மாநிலங்கள் இக்காட்டின் காரணமாகவே ஏற்பட்டது.

உலக அரச தலைவர்கள் இந்த தீயை ‘சர்வதேச நெருக்கடி’ என்று கூறியுள்ளனர். அதேநேரம் இந்த விவகாரம் தொடர்பாக G7 உச்சி மாநாட்டில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

அதேவேளை பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ, ஜனாதிபதி தேர்தலுக்காக அமேசன் காட்டைப் பொருளாதார ரீதியாகப் பயன்படுத்தியிருந்ததாக அவர்மீது பிரேசிலைச் சேர்ந்த சூழலியல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகிறமை குறிப்பிடத்தக்கது.

 

The destruction of the rainforest is a huge threat to the existence of the Karipuna indigenous people, since the forest is a life giving force for the community.
The Karipuna Indigenous Land, located in the municipalities of Nova Mamoré and Porto Velho, in Rondônia state, has been rapidly destroyed by the ostensive invasion of loggers and grileiros (land grabbers). Although it was recognized as an Indigenous Land by Brazilian government in 1988, over 11,000 hectares of the Amazon forest have already been destroyed; 80% in the last three years alone. Even the sale of lots has been carried out by the invaders. The Karipuna are a indigenous people of recent contact with surrounding society, and were almost extinct in the 1970s. Currently, the Karipuna population totals 58 people.
A destruição da floresta é uma enorme ameaça à existência do povo Karipuna, já que a própria floresta é uma força vital para a comunidade.
A Terra Indígena Karipuna, localizada nos municípios de Nova Mamoré e Porto Velho (RO), vem sendo rapidamente destruída pela ostensiva invasão de madeireiros e grileiros. Apesar de ter sido homologada pela Presidência da República em 1988, mais de 11 mil hectares de floresta amazônica já foram destruídos, sendo 80% apenas nos últimos três anos. Até mesmo a venda de lotes vem sendo realizada pelos invasores. Povo de recente contato com a sociedade envolvente, os Karipuna quase foram extintos na década de 1970. Atualmente, a população Karipuna totaliza 58 pessoas.

Recommended For You

About the Author: ஈழவன்