பரிஸில் இரசாயன குண்டுகள் மீட்பு.

பிரான்ஸ் தலைநகர் பரிஸிலுள்ள பூங்கா ஒன்றிலிருந்து இரசாயனக் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

Essonne மாவட்டத்திலுள்ள பூங்கா ஒன்றிலிருந்தே இந்த குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பூங்காவின் வாசலில் இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக பொலிஸார் அழைக்கப்பட்டனர்.

குறித்த குண்டுகள் வீட்டில் வைத்து கைகளால் தயாரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக நான்கு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பெரியளவில் ஆபத்தில்லை என்றபோதும், விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.


Recommended For You

About the Author: ஈழவன்