தனஞ்சய சதம் விளாசி அசத்தல்

நியூஸிலாந்து அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில், இலங்கை அணி முதலாவது இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்களை பெற்றுள்ளது.

கொழும்பு பி சாரா ஓவல் மைதானத்தில் 22ஆம் திகதி ஆரம்பமான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற, இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸிற்காக 244 ஓட்டங்களை பெற்றுள்ளது.

இதன்போது, லஹிரு திரிமன்னே 2 ஓட்டங்களுடனும், குசல் மெண்டிஸ் 32 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.

மேலும், அஞ்சலோ மெத்தியூஸ் 2 ஓட்டங்களுடனும், குசல் பெரேரா ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஏமாற்றினர்.

திமுத் கருணாரத்ன 65 ஓட்டங்களுடன் ஆறுதல் அளிக்க, தனஞ்சய டி சில்வா 109 ஓட்டங்கள் அடித்து அசத்தினார்.

நிரோஷன் டிக்வெல் ஓட்டமெதுவும் பெறாத நிலையில் ஏமாற்ற, தில்ருவான் பெரேரா 13 ஓட்டங்களையும், சுரங்க லக்மால் 10 ஓட்டங்களையும், லசித் எம்புல் தெனிய ஓட்டமெதுவும் பெறாத நிலையிலும் ஆட்டமிழந்தனர். லஹிரு குமார 5 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காது களத்தில் இருந்தார்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சில், டிம் சவுத்தீ 4 விக்கெட்டுகளையும், ட்ரெண்ட் போல்ட் 3 விக்கெட்டுகளையும், கொலின் டி கிராண்ட்ஹோமி, வில்லியம் சோமர் வில்லே மற்றும் அஜாஸ் பட்டேல் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

நியூஸிலாந்து அணி, தற்போது தனது முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிக் கொண்டிருக்கின்றது.


Recommended For You

About the Author: ஈழவன்