பெண் வைத்தியரை பலாத்காரம் செய்த முயற்சித்தவருக்கு விளக்க மறியல்

பெண் வைத்தியரை கட்டி அரவணைத்த சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட 34 வயதுடைய சந்தேகநபரை எதிர்வரும் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.

திருகோணமலை- கோமரங்கடவல பொலிஸார் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நேற்று திருகோணமலை நீதிமன்ற மேலதிக நீதவான் சமிலா குமாரி ரத்னாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இவ்வுத்தரவை பிறப்பித்துள்ளார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான  34 வயதுடைய நபர் எனவும் தெரியவருகின்றது.

குறித்த சந்தேகநபர் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையின்  புனர் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்ட வந்தவர் எனவும், மலசலகூடத்தினை புனரமைப்பதற்காக அவ்விடங்களை காட்டிக்கொண்டிருந்த போது பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக முயற்சித்தார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனாலும் பெண் வைத்தியர் திருமணமாகாத நிலையில் தனிமையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்ற முடியாமல் இருப்பதாகவும், தனக்கு கொழும்பிற்கு இடமாற்றம் வழங்குமாறு கோரப்பட்டிருந்த நிலையில் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றிருப்பது  பொய் குற்றச்சாட்டாக இருக்குமோ எனவும் வைத்தியசாலை ஊழியர்கள் சந்தேகிக்கின்றனர்.

இருந்தபோதிலும் தனக்கு கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் கடமையாற்றுவதற்கு பயமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி தனக்கு இடமாற்றம் பெற்று கொள்வதற்காக இச்சந்தர்பத்தினை பயன்படுத்தி இருக்கலாம் எனவும் நீதவான் முன்னிலையில் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை பொலிஸார் பாலியல் பலாத்காரம் புரிந்துள்ளதாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளமையினால் எதிர்வரும் 02ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கட்டளை பிறப்பித்தார்.


Recommended For You

About the Author: Ananya