கோட்டையில் தேசிய இப்தார் வைபவம்

இஸ்லாமிய பக்தர்களுக்காக செய்யப்பட்ட தேசிய இப்தார் வைபவம் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (03) பிற்பகல் கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

அனைத்து இனங்களினதும் மதங்களினதும் கௌரவத்தினை பாதுகாத்து அனைவருக்கும் நியாயத்தைப் பெற்றுக்கொடுப்பதற்காக ஜனாதிபதி அவர்கள் மேற்கொண்டுவரும் முயற்சியை பாராட்டிய இஸ்லாமிய மதத் தலைவர்கள், நாட்டில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவதற்கும் ஆசி வழங்கினர்.

இஸ்லாமிய மதத் தலைவர்களும் பெருமளவிலான இஸ்லாமிய பக்தர்களும் சபாநாயகர் கரு ஜயசூரிய உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் வெளிநாட்டு தூதுவர்கள், வர்த்தக சமூகத்தினர் உள்ளிட்ட அதிதிகள் பலரும் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.

 


Recommended For You

About the Author: Editor