பிரசவ வலி எடுத்த பெண்ணை ஊர் மக்கள் என்ன செய்தார்கள்

குழந்தை பெற்றெடுப்பதற்காக கர்ப்பிணியை கிராமவாசிகள் 12 கி.மீ. தூரம் கட்டிலில் சுமந்து சென்ற அவலம் நடந்துள்ளது.

ஒடிசா மாநிலம் காளஹண்டி மாவட்டம் உள்ளது நெஹலா கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு உள்ளது. ஆனால் அந்த கிராமத்துக்கு அம்புலன்ஸ் வந்து சேர்வதற்கு முறையான வீதி வசதிகள் எதுவும் இல்லை.

அவர்கள் அம்புலன்ஸ் வசதியை பெற வேண்டுமெனில் தங்களது கிராமத்தில் இருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள கனிகுமா கிராம் நகரை வந்தடைய வேண்டும்.

இதனால் அவரது உறவினர்கள், கர்ப்பிணியை கட்டிலில் படுக்க வைத்தபடி தோளில் சுமந்து கொண்டு 12 கி.மீட்டர் தொலைவை கடந்து கனிகுமா கிராமத்தை அடைந்தனர்.

கர்ப்பிணி பெண்ணை தோளில் சுமந்தபடியே, வழியில் குறுக்கிட்ட ஜெலிங்கதோரா ஆற்றையும் கடந்து சென்றனர். பின்னர் கனிகுமாவில் இருந்து அம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அதன் பின் அந்த பெண்ணுக்கு மருத்துவ உதவி கிடைத்தது.


Recommended For You

About the Author: Ananya