விமான நிலையத்தில் இருவர் கைது

இன்டர்போல்’ எனப்படும் சர்வதேசப் பொலிஸாரால் தேடப்பட்ட ஈரானியர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று (23) கைது செய்யப்பட்டனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 28 வயதான பெண்ணும் 18 வயதான ஆணும் என தெரிவிக்கப்படுகிறது.

தங்களைப் பிரான்ஸ் பிரஜைகள் என ஆதாரப்படுத்தும் வகையில் போலியான கடவுச் சீட்டுகளை இவர்கள் வைத்திருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இவ்வாறு தங்களைப் பிரான்ஸ் பிரஜைகள் எனத் தெரிவித்து நாட்டுக்குள் உட்பிரவேசித்து இலங்கையில் சில காலம் தங்கியிருப்பதற்கு இவர்கள் திட்டமிட்டிருந்தமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இவர்களை நாடு கடத்துவதற்கான ஏற்பாடுகளை குடிவரவு குடியகல்வு திணைக்கள் அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.


Recommended For You

About the Author: Ananya