தமிழர்களின் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை

ஜனாதிபதிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று (23) மாலை பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இதன்போது தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் முன்னேடுக்கும் நில ஆக்கிரமிப்பு, திருகோணமலை – கன்னியா, முல்லைத்தீவு – நீராவியடி ஆலயங்களை பௌத்தமயாக்கும் செயற்படாடுகள் மற்றும் விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த பிரச்சினைகள் தொடர்பில் 28ம் திகதி ஜனாதிபதி தலைமையில் பாதுகாப்பு படையினர் உள்ளிட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


Recommended For You

About the Author: Ananya