சில நாட்களில் திருமணம் : எமனாக மாறிய கைத்தொலைபேசி

தமிழகத்தில் இன்னும் 8 நாட்களில் திருமணம் நடக்கவிருந்த நிலையில் பெண்ணொருவர் ரயில் மோதி உ யிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரத்தின் சின்ன நெற்குணம் பகுதியை சேர்ந்தவர் ஜான்சிராணி. தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவருக்கு வருகிற செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி திருமணம் நிச்சயமிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்று காலையில் பணிக்கு செல்வதற்காக வீட்டிலிருந்து கிளம்பிய ஜான்சி ராணி, வழியிலுள்ள சென்னை – திருச்சி ரயில் பாதையை செல்போனில் பேசிக்கொண்டே கடக்க முயன்றதாக கூறப்படுகிறது.

அப்போது அந்த வழியாக வந்த அதிவிரைவு ரயில் ஜான்சிராணி மீது மோதியதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

திருமணமாவதற்கு இன்னும் 8 நாட்களே உள்ள நிலையில் செல்போன் ஜான்சிராணிக்கு எமனாக வந்து அவர் உயிரை பறித்ததை அறிந்த உறவினர் வேதனையில் க தறி அழுதனர். இதனிடையில் விபத்து குறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Recommended For You

About the Author: Ananya