இந்தியாவின் பொருளாதாரம் மிகவும் சிறப்பாகவே உள்ளது.

வரி சலுகைகள்.. நிர்மலா சீதாராமன் அதிரடி அறிவிப்பு-வீடியோ டெல்லி: உலகம் முழுக்க பொருளாதார சரிவு நிலவி வருகிறது, ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் தொடர்ந்து நலன் நிலையில் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

இந்தியா பொருளாதாரம் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு மோசமான சரிவை சந்தித்துள்ளது. தற்போது 1 டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 72 ரூபாயாக குறைந்துள்ளது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் இந்தியாவின் பொருளாதாரம் மிகப்பெரிய சரிவை சந்தித்து பெரிய சிக்கலுக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். பல்வேறு தொழில்முனைவோர்கள் தங்கள் நிறுவனங்களை மூடும் நிலை உருவாகும்.

விளக்கம் அளித்தார் விளக்கம் அளித்தார் அதேபோல் லட்சக்கணக்கில் மக்கள் வேலையை இழக்க வேண்டிய நிலை உருவாகும். இந்த பொருளாதார சரிவு இப்போதே ஆட்டோமொபைல் துறையில் எதிரொலித்துள்ளது.

இதனால் ஆட்டோமொபைல் துறையில் பலர் வேலையை இழந்து வருகிறார்கள். இந்த நிலையில்தான் இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவு குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தார்.

என்ன பேட்டி என்ன பேட்டி அவர் தனது பேட்டியில், தற்போது சர்வதேச ஜிடிபி 3.2% ஆக இருக்கிறது. சர்வதேச அளவில் பொருளாதார மந்தநிலை நிலவி வருகிறது. உலக நாடுகளுடன் ஒப்பிடும் போது நம் நிலை நன்றாகவே உள்ளது. வளர்ந்த நாடுகள், வளரும் நாடுகள் எல்லாம் சரிவை சந்தித்துள்ளது.

உலகம் முழுக்க அமெரிக்கா, ஜெர்மனி ஆகிய நாடுகள் கூட பொருளாதார சரிவை சந்தித்துள்ளது.

உலக அளவில் இப்படி வர்த்தகம் மந்தமடைவது புதிதல்ல. சர்வதேச ஜிடிபி மொத்தமாக குறைய வாய்ப்புள்ளது.

பொருளாதார சீர்திருத்தம்தான் எங்களின் முதல் கொள்கை. என்ன நடவடிக்கை பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இந்தியா மட்டும் பொருளாதார மந்த நிலையில் இல்லை. தவறான பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகிறார்கள்.

என்ன ஆதாயம் பொருளாதாரத்தை சரி செய்ய துணிச்சலான நடவடிக்கையை செய்து வருகிறோம்.எப்போதும் போல எங்களின் நடவடிக்கைகள் தொடரும்.

இந்திய பொருளாதாரம் இந்திய பொருளாதாரம் வளர்ச்சி நிலையில் உள்ளது. அனைத்துத் துறை செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.ஜிஎஸ்டி நடைமுறையில் உள்ள குறைபாடுகள் களையப்படும். ஜிஎஸ்டியில் முக்கியமான மாற்றங்கள் கொண்டு வரப்படும்.ஜிஎஸ்டி வரி விகிதங்களை குறைக்க நடவடிக்கை எடுக்க போகிறோம்.


Recommended For You

About the Author: Editor