பரிஸ் காவல்துறை தலைமையகத்தில் பெண் அதிகாரி தற்கொலை…!!

பரிசில் பெண் காவல்துறை அதிகாரி ஒருவர் தனது சேவைத்துப்பாக்கியை பயன்படுத்தி தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

தற்கொலை செய்துகொண்டுள்ள இப்பெண் அதிகாரி பரிசில் உள்ள காவக்துறை தலமைச் செயலகத்தில் பணிபுரிபவர் என அறியமுடிகிறது. இவரது சடலம் நேற்று வியாழக்கிழமை Drancy நகரில் உள்ள வாகன தரிப்பிடம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.

மகிழுந்தை தரித்து நிறுத்திவிட்டு, உள்ளிருந்துகொண்டு சேவைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டுள்ளார். இவர் 26 வயதுடையவர் என அறியமுடிகிறது.

இவ்வருடத்தில் இடம்பெற்ற 47 ஆவது காவக்துறை அதிகாரியின் தற்கொலை இது எனவும், ஜூலை 28 ஆம் திகதி ஓல்னே-சூ-பூவா நகரில் பணிபுரியும் அதிகாரி ஒருவரும், சில நாட்கள் முன்பாக Cergy-Pontoise நகரில் பணிபுரியும் அதிகாரியும் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Editor