பூங்கா ஒன்றில் இருந்து அசிட் வெடிகுண்டு மீட்பு!!

Essonne மாவட்டத்தில் உள்ள பூங்கா ஒன்றில் இருந்து அசிட் வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

சனிக்கிழமை இரவு இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Villabé நகரில் உள்ள Heridan பூங்காவில் இந்த அசிட் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

பூங்காவின் வாசலில் இந்த குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்டனர். இந்த அசிட் குண்டுகள் வீட்டில் வைத்து கைகளால் தயாரிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மொத்தமாக நான்கு குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன. பெரியளவில் ஆபத்தில்லை என்றபோதும், இச்செயலில் ஈடுபட்டவர்கள் குறித்து தகவல்களை தாம் திரட்டி வருவதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.


Recommended For You

About the Author: Editor