நயன்தாராவின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்!

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், மெகா ஸ்டார் சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார்.

அந்த வகையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று ‘லவ் ஆக்சன் டிராமா’ என்ற மலையாள படம்.

நிவின்பாலி நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஓணம் திருவிழாவின்போது ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் ‘லவ் ஆக்சன் டிராமா’ திரைப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 24ஆம் தேதி அதாவது நாளை வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் இந்த படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


Recommended For You

About the Author: Editor