லாஸ்லியா மாதிரி நல்ல பொண்ணா பாரு!

வைபவ், பாலக் லால்வானி, சதீஷ் நடிப்பில் சாச்சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சிக்ஸர்’ திரைப்படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் மாலை நேரத்தில் பார்வைக்குறைபாடு உள்ள ஒரு கேரக்டரில் வைபவ் நடித்துள்ளார். இந்த குறைபாட்டால் அவருக்கு ஏற்படும் பிரச்சனைகள், அவரது காதலியிடம் இந்த உண்மை தெரியாமல் அவர் காக்க எடுக்கும் முயற்சிகள் தான் இந்த படத்தின் கதை என தெரிகிறது. படத்தின் பெரும்பாலான வசனங்கள் இந்த மாலைக்கண் நோய் குறித்தே நகைச்சுவையாக உருவாக்கப்பட்டுள்ளது.

விஜய் டிவி புகழ் ராமர், சதீஷ் காமெடி படத்தில் சிறப்பு அம்சமாக இருக்கும் என தெரிகிறது. குறிப்பாக ‘எனக்கு லாஸ்லியா மாதிரி ஒரு பொண்ணு பாரு, அந்த பொண்ணு மோகன் வைத்யா மாதிரி அப்பப்ப எனக்கு கிஸ் கொடுக்கணும்’ என்று வில்லனிடம் சதீஷ் பேசும் வசனம் நிச்சயம் தியேட்டரில் வரவேற்பை பெரும் என தெரிகிறது.

ஜிப்ரான் இசையில், பிஜி முத்தையா ஒளிப்பதிவில் உருவாகியுள்ள இந்த படத்தை வால்மேட் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. மொத்தத்தில் இந்த படம் வைபவ்வுக்கு ஒரு திருப்புமுனையை கொடுக்கும் படமாக இருக்கும் என டிரைலரில் இருந்து தெரிய வருகிறது.


Recommended For You

About the Author: Editor