சூர்யாவின் ‘காப்பான்’ சென்சார் தகவல்

சூர்யா நடிப்பில் இயக்குனர் கே.வி.ஆனந்த் இயக்கியுள்ள ‘காப்பான்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகளும் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிலையில் இந்த படத்தின் சென்சார் தகவல்கள் குறித்த தகவல்கள் சற்றுமுன் வெளியானது

‘காப்பான்’ திரைப்படத்திற்கு எதிர்பார்த்தபடியே’ யூஏ’ சான்றிதழை சென்சார் அதிகாரிகள் அளித்துள்ளனர். சென்சார் பணிகள் முடிவடைந்ததை அடுத்து ‘காப்பான்’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுபாஷ் என்ற கமாண்டோ அதிகாரி கேரக்டரில் சூர்யாவும், அவருகு ஜோடியாக காவ்யா என்ற கேரக்டரில் சாயிஷாவும் நடித்துள்ள இந்த படத்தில் இந்திய பிரதமர் கேரக்டரில் மோகன்லால் நடித்துள்ளார். மேலும் பொமன் இரானி, சமுத்திரக்கனி, ஆர்யா, பூர்ணா, தலைவாசல் விஜய் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்திற்கு எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவும், அந்தோணி படத்தொகுப்பு பணியும் செய்துள்ளனர்.

ஹாரீஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்த படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியாகி சூப்பர்ஹிட்டாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது


Recommended For You

About the Author: Editor