பிக்பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் யார்?

பிக்பாஸ் வீட்டின் அடுத்த கேப்டன் தேர்வுக்கு சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகிய மூவர் தேர்வு பெற்றுள்ள நிலையில் இதில் ஒருவரை கேப்டனாக தேர்வு செய்யும் டாஸ்க் இன்று நடைபெறுகிறது.

இந்த டாஸ்க்கில் கேப்டன் பதவிக்கு போட்டியிடும் மூவரின் புகைப்படங்கள் ஒரு போர்டில் வைக்கப்படுகிறது. இதில் எந்த போட்டியாளரின் பெயர் முதலில் ஐந்து முறை தேர்வு செய்யப்படுகிறதோ, அவரே இந்த பிக்பாஸ் வீட்டின் அடுத்த வார கேப்டன் என பிக்பாஸ் கூறுகிறார்.

இதனையடுத்து சேரனின் புகைப்படம் முதலில் ஐந்து முறை குறிப்பிடப்படுவதால் அவர் அடுத்த கேப்டனாக தேர்வு செய்யப்படுகிறார். அவருக்கு சக போட்டியாளர்கள் வாழ்த்து தெரிவிக்கின்றனர்.

இந்த வாரம் பிக்பாஸ் வீட்டில் இருந்து கஸ்தூரி செல்ல வாய்ப்பு உள்ளதாக ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் அடுத்த வாரம் சேரன் கேப்டன் என்பதால் அவரை நாமினேட் செய்ய முடியாது. எனவே வனிதா, லாஸ்லியா, ஷெரின், கவின், தர்ஷன், சாண்டி, முகின் ஆகிய ஏழு பேர்களில் ஒருவர் வெளியே செல்ல வேண்டிய நிலை ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த வாரம் நாமினேஷனும் வாக்குகள் வித்தியாசங்களும் வித்தியாசமாக இருக்கும் என கருதப்படுகிறது.

Vijay Television

@vijaytelevision

Embedded video

Recommended For You

About the Author: Editor