ரூ.500 கோடி ‘இராமாயணம்’ படத்தில் ஹிருத்திக்-தீபிகா?

இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் இந்த கதை எத்தனை முறை படமாக்கப்பட்டாலும், எத்தனை முறை தொலைக்காட்சி தொடராக உருவாக்கினாலும் மக்களிடம் வரவேற்பு கிடைப்பதுண்டு.

அந்த வகையில் நவீன டெக்னாலஜியில் 3D தொழில்நுட்பத்தில் ‘இராமாயணம்’ படம் ரூ.500 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது

நிதிஷ் திவாரி மற்றும் ரவி உதய்வார் ஆகியோர் இணைந்து இயக்கவுள்ள இந்த படத்திற்கான ஸ்கிரிப்ட் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகவிருக்கும் இந்த படத்தில் பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நட்சத்திரங்கள் நடிக்கவுள்ளனர்.

இந்த நிலையில் ராமர் மற்றும் சீதை கேரக்டர்களில் நடிக்க ஹிருத்திக் ரோஷன் மற்றும் தீபிகா படுகோனே நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. மேலும் ராமர் கேரக்டருக்கு பிரபாஸ் பெயரும் அடிபடுகிறது.

இருப்பினும் தற்போது இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்து இன்னும் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்றும்  இயக்குனர்கள் தெரிவித்துள்ளனர்,

 


Recommended For You

About the Author: Editor