விஜய் கொடுத்த தங்கமோதிரத்தை ‘பிகில் டிசைனர் என்ன செய்தார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் ‘பிகில்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. தற்போது பின்னணி இசை உள்பட இந்த படத்தின் தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ‘பிகில்’ படத்தின் நிறைவு நாள் படப்பிடிப்பு அன்று படக்குழுவினர் அனைவருக்கும் விஜய் தனது கையால் தங்கமோதிரம் ஒன்றை வழங்கினார். இதுகுறித்து ‘பிகில்’ படக்குழுவினர் அனைவரும் பெருமையுடன் தங்கள் சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்தனர்

இந்த நிலையில் ‘பிகில்’ படத்தின் டிசைனராக பணிபுரிந்த கோபி பிரசன்னா, விஜய் கொடுத்த தங்க மோதிரத்தை ‘பேட்மேன்’ பொம்மைக்கு அணிவித்து அதனை புகைப்படம் எடுத்து தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு டிசைனராக தான் பெற்ற முதல் பரிசு இதுதான் என்று குறிப்பிட்ட கோபி, தளபதி விஜய்க்கு தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.  இந்த பதிவுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Gopi Prasannaa@gopiprasannaa
View image on Twitter

9,619


Recommended For You

About the Author: Editor