அவுஸ்ரேலியாவின் கொள்கைக்கு எதிராக இந்தோனேசியாவில் போராட்டம்

அவுஸ்ரேலியாவின் கடுமையான எல்லைக் கொள்கைகள் காரணமாக இந்தோனேசியாவில் தாங்கள் பல ஆண்டுகளாக தவித்து வருவதாக அகதிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்தோனேசியாவில் உள்ள அவுஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின் போதே அகதிகள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.

குறித்த ஆர்ப்பாட்டத்தில் 600 இற்கும் மேற்பட்ட அகதிகள் பங்கேற்றிருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆப்கானிஸ்தான், சோமாலியா, மியன்மார், இலங்கை உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த சுமார் 14,000 அகதிகள் இந்தோனேசிய முகாம்களில் வசித்து வருகின்றனர்.

இவர்களில் பெரும்பாலானோர் அவுஸ்ரேலியாவில் மீள்குடியேற காத்திருக்கக்கூடிய அகதிகள். ஆனால், கடுமையான எல்லைப் பாதுகாப்பு கொள்கையின் அடிப்படையில் அகதிகள் விடயத்தில் கடுமையான நிலைப்பாட்டை அவுஸ்ரேலிய அரசாங்கம் பின்பற்றி வருகிறது.

இந்த சூழலில், மனிதாபிமானமற்ற விதிகளை அவுஸ்ரேலிய அரசாங்கம் திரும்ப பெற வேண்டும் அதிகாரிகளிடம் கையளித்துள்ள கடிதத்தில் அகதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

‘நாங்கள் இந்தோனேசியாவில் எந்த அடிப்படை உரிமையுமின்றி கிடக்கிறோம். மன ரீதியாகவும் அகதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்’ என குறித்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2013ஆம் ஆண்டு முதல் கடுமையான எல்லைப்பாதுகாப்பு கொள்கையினை நடைமுறைப்படுத்தி வரும் அவுஸ்ரேலிய அரசாங்கம், படகில் வர முயற்சிக்கும் அகதிகளை திருப்பி அனுப்பி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Recommended For You

About the Author: Ananya