பெண் வைத்தியரைப் பலாத்காரம் செய்த குடும்பஸ்தர் கைது!!

திருகோணமலை- கோமரசங்கடவை பகுதியில் பெண் வைத்தியா் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் நேற்று மாலை நபா் ஒருவா் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கிண்ணியா பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை எனவும்

34 வயது உடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் குறித்து தெரியவருகையில்,

திருகோணமலை கோமரங்கடவல பகுதியில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் நிர்மாணப் பணிகளில் ஈடுபட்டு வந்த ஒப்பந்தகாரர்களில் ஒருவர் பெண் வைத்தியர் தங்கியிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள பழைய மலசல கூடங்களை நிர்மாணிப்பதற்காக அப்பகுதியை காண்பிக்குமாறும், வைத்தியரிடம் கேட்டுள்ளார்.

இதனையடுத்து பெண் வைத்தியர் ஒப்பந்தகாரருடன் சென்று அப்பகுதியை காண்பிக்கின்றபோது

வைத்தியரை பலாத்காரம் செய்ததாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதையடுத்து சந்தேக நபரை தாம் கைது செய்ததாக கூறியுள்ள் பொலிஸார் அவரை இன்றையதினம் திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor