
தொழிலதிபர் ரொஷான் பல்லேவத்த மற்றும் சட்டத்தரணி நாகானந்த கொடிதுவக்கு ஆகியோர் தலைமையில் புதிய கூட்டணியொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
உருவாக்கப்பட்டுள்ள இந்தப் புதிய கூட்டணிக்கு அபிமன் லங்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இதற்கான நிகழ்வு கொழும்பில் நேற்று இரவு இடம்பெற்றது.
இந்நிலைல் இப் புதிய கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் அறிவிப்பு எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
இதற்கு முன்ஏற்பாடாக நேற்றைய தினம் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இதேவேளை தற்சமயம் இவ்விரு தரப்பினரும் வடக்கு,கிழக்கு பகுதிகளுக்கு இந்த வார இறுதிக்குள் பிரசாரங்களை செய்துமுடித்து, மலையகப் பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.