சந்திரிக்கா – மைத்திரி இரகசிய சந்திப்பு!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவுக்கும் இடையே மிகவும் தீர்க்கமான சந்திப்பொன்று நேற்று முன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது.

சுமார் 45 நிமிடங்கள் இந்த சந்திப்பு நீடித்திருப்பதாக அறியமுடிகிறது.

ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் எதிர்காலமும், அரசியல் உபாயங்கள் குறித்து இதன்போது ஆராயப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான குழுவுக்கு ஆதரவளிப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற நிலையில் அது வெற்றிகரமாக இடம்பெறாதிருக்கின்ற சூழ்நிலை காணப்படுகிறது.

இந்த நிலையில் ஜனாதிபதியை சந்தித்துள்ள முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, மஹிந்த – கோட்டா அணிக்கு எதிரான நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளாமல், 2015ஆம் ஆண்டில் தைரியமாக எடுத்த துணிச்சல்மிகு தீர்மானங்களை மீண்டும் எடுக்கும்படி வலியுறுத்தியிருப்பதாக அறியமுடிகின்றது.


Recommended For You

About the Author: Editor