மட்டக்களப்பு வைத்தியசாலை குறித்து பொதுமக்கள்!

கடந்த வாரம் மகப்பேறுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு கடமையாற்றும் பிரபல மகப்பேற்று நிபுணர் பிள்ளையை சிசேரியன் சிகிச்சையூடாக பெறுவதற்கு திட்டமிட்டு இருந்தனர்.

இந்நிலையில் மறுநாள் சிசேரியன் சிகிச்சையில் முடிவடைந்த நிலையில் குழந்தையை அவசர சிக்கிச்சை பிரிவுக்கு அழைத்து சென்ற சிறிது நேரத்திலேயே குழந்தை இறந்துள்ளது.

மேலும் இதேபோலவே கடந்த வருடத்தில் ஒரு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக இச்சம்பவத்தில் பாதிப்படைத்த நபர் ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார்.

குறித்த வைத்தியசாலையில் இது போன்று சிசு மரணங்கள் அடிக்கடி நடப்பதாக பொதுமக்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கிறனர். இது தொடர்பான அங்குள்ள அதிகாரிகள் விசாரணையை முன்னெடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Recommended For You

About the Author: Editor