சஜித்துக்கு ஆதரவு தெரிவித்து பேரணி!!

அமைச்சர் சஜித் பிரேமதாஸவை ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்த வேண்டுமென வலியுறுத்தி ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடத்தப்படவுள்ளது.

குறித்த பேரணி மாத்தறையில் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெறவுள்ளது.

அமைச்சர் மங்கள சமரவீரவின் ஏற்பாட்டின் கீழ் பேரணிக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

மக்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகளின் வேண்டுகோளின் பேரில் இந்த பேரணி நடத்தப்படுவதாக அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.


Recommended For You

About the Author: Editor